மசாலா பிரெஞ்ச் டோஸ்ட் செய்து கொடுங்களேன்

தேவையானப் பொருட்கள்: பிரெட் ஸ்லைஸ்கள் - 4, முட்டை - 3, வெங்காயம் - 1, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி - 1 கைப்பிடி.

சீஸ் - 1 ஸ்லைஸ், மிளகாய் துாள், தனியா துாள் - தலா 1 டீஸ்பூன், மஞ்சள் துாள், மிளகு துாள் - தலா 0.50 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையானளவு.

ஒரு அகலமான பாத்திரத்தில், முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.

இதில், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மிளகாய் துாள், மிளகு துாள், தனியா துாள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானவுடன், பிரட் ஸ்லைஸ்களை, முட்டை மசாலா கலவையில் 2 பக்கமும் தோய்த்தெடுத்து போடவும்.

அதன் மீது சீஸ் துருவலை துாவி, சிறிதளவு முட்டை கலவையை ஊற்றவும்.

மிதமான தணலில் வைத்து, 2 பக்கமும் பொன்னிறமாக டோஸ்ட் செய்தால், சுவையான மசாலா பிரெஞ்ச் டோஸ்ட் ரெடி.

தக்காளி சாஸுடன் சாப்பிட சுவை அள்ளும். காலை, மாலை டிபனுக்கு ஏற்றது. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.