இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்
ஒவ்வொரு ஆண்டும் மே 3 அன்று உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது.
1993ல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
உள்ளூர் முதல் உலக நிகழ்வுகளை உண்மை நிலையில் இருந்து தவறாமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கு வழங்குவதே பத்திரிகை.
இவை சுதந்திரமாக செயல்பட்டால் தான் உண்மை நீடிக்கும்.
பத்திரிகை சுதந்திரத்தை காப்பது, பத்திரிகையாளர் மீதான தாக்குதலை தடுக்கும் விதமாக ஐ.நா., சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஆபத்து காலத்தில் பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராக போராடும் தனி நபர், பத்திரிகை, தொண்டு நிறுவனத்துக்கு 'யுனெஸ்கோ சார்பில் விருது வழங்கப்படுகிறது.
கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பது மற்றும் ஜனநாயகத்தின் தூண்களாக ஊடகங்கள் செயல்படுவதை உறுதி செய்வதும் இதன் முக்கிய நோக்கங்களாகும்.
அமைதியான எதிர்காலத்தை வடிவமைத்தல்: மனித உரிமைகள், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பத்திரிகை சுதந்திரத்தை மேம்படுத்துதல் இத்தாண்டிற்கான மையக்கருத்து.