இதய, சர்க்கரை நோயாளியாக்கும் மெனோபாஸ்?
'மெனோபாஸ்' வயதில், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைந்து விடுவதால், கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாகி, மாரடைப்பு வரும் அபாயம் அதிகரிக்கிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
பொதுவான மாரடைப்பு அறிகுறிகளான, மார்பு வலி அதிக வியர்வை என்று இல்லாமல், வேறு விதமாக கூட வரலாம். இதனால் கண்டுபிடிக்க முடியாமல் போவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.
மேலும் மெனோபாஸ் சமயத்தில் இடுப்பு, கை பகுதிகளில் கொழுப்பு அதிகம் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கொழுப்பு அளவு சீராக இல்லாதது, உடல் பருமன் அதிகமாவது, இன்சுலின் ஹார்மோன் சரியானபடி செயல்படாமல், சர்க்கரை நோயாளியாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
எனவே, ரத்த சர்க்கரை அளவையும், கொழுப்பையும் பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
டாக்டரின் ஆலோசனைப்படி, முழு உடல் பரிசோதனை, மேமோகிராம், கர்ப்பப்பையில் பிரச்னை உள்ளதா என அறிய ஸ்கேன் பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம்.
வாழ்க்கை முறை மாற்றத்தால், மெனோபாஸ் பிரச்னைகளை சமாளிக்கலாம்.
உடல் எடைக்கு ஏற்ப, புரதம், முழு தானியங்கள், தயிர், பால், மோர், எள், கேழ்வரகு, முருங்கைக்கீரை போன்ற கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.
'ஸ்ட்ரெத் டிரைனிங்' உடற்பயிற்சிகளை செய்தால், தசைப் பகுதிகள் நன்கு வலுவடைந்து, எலும்பின் திடம் குறையாமல் பாதுகாக்க முடியும்.