மொபைல் போன் கதிர்வீச்சு... பயன்படுத்துவதில் கவனம் தேவை!
இன்றைய நாகரிக உலகில் மொபைல்போன்களை பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், அதன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.
ஏனெனில், அவற்றை பயன்படுத்தாவிட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிப்பை உண்டாக்குகிறது.
கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாமுள்ளது. மூளையில் 2 வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாள் ஒன்றுக்கு, 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் உள்ளதால், முடிந்தளவு பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
'லேண்ட்லைன்' வசதி இருந்தால் அந்த இடங்களில் மொபைல்போன் பயன்பாட்டை தவிர்க்கவும். ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க SMS வசதியை பயன்படுத்தவும்.
குழந்தைகளிடம் மொபைல்போன்களில் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால், குழந்தைகளை எளிதாக கதீர்வீச்சு தாக்கும் அபாயமுள்ளது.
அதேப்போல், மொபைல்போனில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட மொபைல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது.
துாங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு துாங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்; Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் ரிங் போகும் பொழுது, 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
மொபைல்போன்களில் பேசும் பொழுது இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
மொபைல்போன்களில் விளையாடுவதை முடிந்தளவு தவிர்க்கவும். குறிப்பாக, பயணத்தின் போது உன்னிப்பாக பார்ப்பதால், கண்களின் லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.