கபத்திலிருந்து காப்பாற்றும் கடுகு தேநீர்!

மழைக்காலம் தொடங்கி விட்டதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு வறட்டு இருமல், மார்பு சளி அதிகமாக பாதிக்கிறது. சில குழந்தைகள் மூச்சு விடவே சிரமப்படுவார்கள்.

இது போன்று சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமா, நிமோனியா பாதிப்பு இருந்தால், நம் சமையல் அறையில் எப்போதும் இருக்கும் கடுகு நல்ல தீர்வாக இருக்கும்.

வெறும் வாணலியில் கடுகை வறுத்து, ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்த பொடியை கண்ணாடி பாட்டிலில் ஈரம் படாமல் வைத்துக் கொள்ளலாம்.

இதிலிருந்து அரை டீ ஸ்பூன் எடுத்து, ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, 45 மில்லியாக குறைந்ததும், வடிகட்டவும்.

அதில் சிறிதளவு தேன், நாட்டுச் சர்க்கரை, வெல்லம் என்று ஏதாவது ஒன்றை கலந்து, காலை உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் குடிக்க வேண்டும்.

இருமல், சளி பாதிப்பு அதிகம் இருந்தால், இதே போன்று ஒவ்வொரு வேளையும் புதிதாக தயார் செய்த கடுகு கஷாயத்தை மூன்று வேளையும் உணவுக்கு 30 நிமிடங்கள் முன் குடிக்கலாம்.

இரண்டு, மூன்று நாட்கள் குடித்தாலே சளி வெளியேறி, மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும்.

மழை காலங்களில் அனைவருமே வாரம் ஒரு முறை இந்த கடுகு கஷாயத்தை குடிக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, இதில் உள்ள செலீனியம் என்ற வேதிப் பொருள், நுரையீரல் அழற்சியை சரி செய்து, கழிவுகளை வெளியேற்றும் தன்மை உடையது.