குட்டீஸ்களுக்கு பிடித்தமான வெங்காய முறுக்கு
தேவையானப் பொருட்கள்: புழுங்கல் அரிசி - 1 கிலோ, பொட்டுக்கடலை மாவு - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 10.
பெரிய வெங்காயம் - 1, வெண்ணெய், சோம்பு, உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.
புழுங்கல் அரிசியை தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய அரிசியுடன், காய்ந்த மிளகாய், நறுக்கிய பெரிய வெங்காயம், சோம்பு, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்த மாவில், உருக்கிய வெண்ணெய், பொட்டுக்கடலை மாவு சேர்த்து, பதமாக பிசையவும்.
அதை முறுக்கு அச்சில் பிழிந்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால், சுவையான 'வெங்காய முறுக்கு' இப்போது ரெடி. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.