டீயுடன் சாப்பிட பாலக் முறுக்கு
தேவையானப் பொருட்கள்: அரிசி மாவு - 2 கப், பொட்டுக் கடலை மாவு - 0.25 கப், பச்சை மிளகாய் - 2, வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.
பாலக்கீரை - 1 கப் சுத்தம் செய்து நறுக்கியது, சீரகம் அல்லது ஓமம் - 1 டீஸ்பூன், பெருங்காயத்துாள் - 0.50 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையானளவு, வெள்ளை எள் - 1 டீஸ்பூன்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, பாலக்கீரையை 2 நிமிடம் போட்டு வேக வைக்கவும். பின் பச்சை மிளகாயுடன், கீரையை சேர்த்து நைசாக அரைக்கவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில், அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, எள், சீரகம், பெருங்காய துாள், உப்பு சேர்த்து கலக்கவும். இந்த கலவையில் வெண்ணெய், அரைத்த கீரை விழுதை சேர்த்து பிசையவும்.
தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
முறுக்கு அச்சில் மாவை கரண்டியின் பின்புறமோ அல்லது பட்டர் பேப்பரிலோ, முறுக்குகளை வட்டமாக பிழியவும்.
அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, சூடானதும் பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்தெடுத்தால், மொறுமொறு பாலக் முறுக்கு ரெடி.