சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் நாடுகள் பட்டியல்; சிங்கப்பூர் முதலிடம், இந்தியா 75வது இடம்

லண்டனைச் சேர்ந்த ஹென்லி அண்டு பார்ட்னர்ஸ் நிறுவனம், சர்வதேச பயணம் குறித்த ஆய்வுகளை செய்கிறது. அந்நிறுவனத்தின் 2026ம் ஆண்டுக்கான சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் இதோ!

உலகின் மிகவும் சகத்திவாய்ந்த பாஸ்போர்ட் நாடுகள் வரிசையில் முதலிடத்தை சிங்கப்பூர் தக்க வைத்து கொண்டுள்ளது. 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

2வது இடத்தில் உள்ள ஜப்பான், தென் கொரியா பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

3வது இடத்தில் உள்ள ஸ்வீடன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாஸ்போர்ட் வைத்திருப்போர் 186 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

85வது இடத்தில் இருந்த இந்தியா 75வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்போது விசா இல்லாமல் 56 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.

இந்தியர்கள் விசா இல்லாமல் பயணியக்கூடிய நாடுகளில் இந்தோனேசியா, பூடான், மாலத்தீவு, கென்யா, உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.