மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...
பெண்மையின் ஹார்மோன் அதிக சுரப்பினால் மார்பக புற்றுநோய் வருவதற்கு சாத்தியம் உண்டு.
குடும்பத்தில் முன்னோர் யாருக்கெனும் இருக்கும் பட்சத்தில் 20 வயதிலும், இயல்பாக 35 வயது நிரம்பிய அனைவரும் தங்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
மார்பகங்களில் கட்டிகள், வீக்கம், தோல் நிறம் மாறுதல், காம்புகளில் ரத்தம் வடிதல் போன்றவை இருந்தால் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும்.
கட்டிகள் இருந்து வலி இல்லை என்றாலும் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது.
வெட்கத்தால் வெளியே செல்லாமல் இருந்தால் நோய் அனைத்து இடங்களிலும் பரவி விடும். தற்போது நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டது.
மெமோகிராம் பரிசோதனை, ஹீமோதெரபி, ரேடியோ தெரபி, அறுவை சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பது எளிது.
தற்போது சில வகை புற்றுநோய்களை தவிர நுாற்றுக்கு 90 சதவீதம் குணமாக்கலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.