தொடர் இருமல் எதனால் ஏற்படுகிறது?
சாதாரணமாக துவங்கும் இருமல் சில வேளையில் மயக்கத்தை ஏற்படுத்தும் அளவு தீவிரமாகும்.
இதை கட்டுப்படுத்தவில்லை என்றால் தலைவலி, குடல் இறக்கம் எனப்படும் ஹெர்னியா போன்ற பாதிப்புக்கு வழி வகுக்கும் .
பொதுவாக ஜலதோஷம், அலர்ஜியினால் ஏற்படும் இருமலே அதிகம். ஜலதோஷ இருமல் முதலில் சளி இன்றி துவங்கி பின் சளி பாதிப்பு ஏற்படும்.
இது 5 முதல் 7 நாட்கள் வரை இருக்கலாம். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்ற பாதிப்பு இருக்கும்.
ஆஸ்துமா, இருமல் சளியின்றியோ, சளியுடனோ இருக்கலாம். அதிகாலையில் நெஞ்சு இறுக்கத்துடன் வரும் இருமலும் ஆஸ்துமாவாவின் அறிகுறியே.
சிகரெட் புகைப்பவர்களுக்கு துவக்கத்தில் லேசான இருமல் இருக்கும். நாளடைவில் தினமும் காலையில் சளியுடன் கூடிய இருமல், சளியில் ரத்தம் வருதல் பாதிப்பு ஏற்படும்.
படுத்தவுடன் வரும் இருமல் சைனஸ் , உணவுக் குழாய், இதய பிரச்னைகளில் ஒன்றாக இருக்கும்.
ஒரு வாரத்திற்கும் மேலாக இருமல் தொடர்ந்தால் நிச்சயம் டாக்டரை சந்தித்து பரிசோதனை, முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.