மூச்சு விட சிரமப்படுவோர் எந்த நிலையில் டாக்டரை அணுகுவது அவசியம்?
மூச்சு விடுவதில் சிரமம் (Dyspnea) என்பது ஆஸ்துமா, நுரையீரல் தொடர்புடைய நோய்கள், இதயப் பிரச்சனை அல்லது தீவிர ஒவ்வாமை ஆகியவற்றின் காரணமாக இருக்கலாம்.
தரையில் 100 அடி நடந்தாலே மூச்சு வாங்குதல், உட்காரும் போது அதிகமாக மூச்சு இழுத்து விடுதல் போன்றவை தீவிர பாதிப்புக்கான அறிகுறிகள்.
மற்றபடி மாடிப்படி ஏறும் போது, நீண்டதுாரம் நடக்கும் போது ஏற்படும் மூச்சிரைப்பு சாதாரணமானது தான். சிறிது நேரத்தில் நுரையீரல் பழைய நிலைக்கு மாறிவிடும்.
வழக்கத்துக்கு மாறாக மூச்சு சார்ந்த பாதிப்புகள் இருத்தல், இரு வாரங்களுக்கு மேல் தொடர் இருமல், எடை குறைவு தொடர்ந்தால் டாக்டரை அனுகலாம்.
மேலும் மாலையில் காய்ச்சல், ரத்தத்துடன் சளி வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், பரிசோதனைகள் செய்வது அவசியம்.
மூச்சுப் பிரச்சனைக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற, நுரையீரல் நிபுணர் அல்லது இதய நோய் நிபுணரை அணுகுவது நல்லது.