செல்லப்பிராணி வளர்ப்பில் முதியோரே கவனம்!
வீட்டில் தனியாக இருப்பவர்களின் பாதுகாப்பு, மன அழுத்தத்திற்கு மாமருந்து செல்லப்பிராணிகள் தான். குறைந்த பராமரிப்பு கொண்ட செல்லப்பிராணிகளை தேர்வு செய்வதே நல்லது.
வாக்கிங் அழைத்து செல்வது, க்ரூமிங் செய்வது, குளிப்பாட்டுவது போன்றவற்றை வயதானவர்களால் செய்ய முடியாமல் போகலாம்.
நாய்தான் வளர்க்க வேண்டுமென முடிவெடுத்தால் டாபர்மேன், கோல்டன் ரெட்ரீவர், லேப்ரடார் வளர்க்கலாம்; பராமரிப்பது எளிது.
பூனை தன்னைத்தானே சுத்தப்படுத்தி கொள்ளும். வீட்டிற்குள்ளே வளரும்.
இவ்விரு செல்லப்பிராணிகளுக்கும் முறையாக தடுப்பூசி போடுவது, குடற்புழு நீக்குவது அவசியம். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், பறவை, மீன் வளர்க்கலாம்.
செல்லப்பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு சில நோய்கள் பரவும். குறிப்பாக, வீட்டில் எலி இருந்தால், அவற்றின் சிறுநீர் வாயிலாக மனிதர்களுக்கு எலிக்காய்ச்சல் வரலாம்.
நாய், பூனைகளின் உடலில் இருக்கும் பூஞ்சையால், மனிதர்களுக்கு சொறி, சிரங்கு, தடிப்புகள் உருவாகலாம்.
இதனால் விலங்குகளை தொட்ட பிறகும், அவற்றின் கழிவுகளை சுத்தம் செய்த பிறகும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
உங்களுக்கு காயம், புண் இருந்தால், செல்லப்பிராணிகளின் எச்சில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.