படுக்கை அறை வடிவமைப்பில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்!

படுக்கை அறைக்கான வரைபடம் தயாரிக்கும் போதே அதன் உட்புற அமைப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதில் பாதுகாப்பு அடிப்படையிலும், அமைதியான சூழல் இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை கருத்தில் வைத்து செயல்பட வேண்டும்.

படுக்கை அறையில் ஜன்னல் இருக்க வேண்டியது கட்டிலின் தலைப்பகுதி, உறுதியான சுவரை ஒட்டி அமைய வேண்டியது அவசியம்.

அதே நேரம், அந்த சுவருக்கு வெளிப்புறம், சமையலறை போன்ற சத்தம் ஏற்படுத்தும் பயன்பாடு உள்ள விஷயங்கள் அமையாமல் பார்த்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.

வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும் போது, படுக்கை அறையின் வாயில் நேரடியாக தெரியும்படி அமைய கூடாது.

அடு மட்டுமல்லாது, படுக்கை அறையின் வாயிலில் நின்று பார்க்கும் போது அதற்கு நேராக கட்டிலின் கால் பகுதி அமைவதையும் தவிர்க்க வேண்டும்.

படுக்கை அறையில் வாசலுக்கும், ஜன்னலுக்கும் இடையிலான நேர்கோட்டில் குறுக்காக கட்டில் அமைவது, ஓரளவுக்கு பாதுகாப்பு உணர்வை கொடுக்கும்.

இது மட்டமல்லாது, படுக்கை அறையில் தொலைக்காட்சி அமைக்க விரும்பினால், அது கட்டிலின் தலைப்பகுதிக்கு நேர் எதிர்திசையில் இருக்க வேண்டும்.

தொலைக்காட்சி பக்கவாட்டில் இருந்தால், பயன்பாட்டு நிலையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

இது போன்ற அடிப்படை விஷயங்களை கவனத்தில் வைத்து வரைபடம் தயாரித்தால் நிம்மதியான துாக்கத்தை உறுதி செய்ய முடியும் என்கின்றனர் கட்டுமான வடிவமைப்பாளர்கள்.