கல்லீரல் வீக்க பாதிப்பு குறித்து அறிவோமா?
கொழுப்பு கல்லீரல் (பேட்டி லிவர்) என்பது மது குடிப்பவர்களுக்கே வரும் என்ற தவறான நம்பிக்கை பலரிடமும் உள்ளது.
இது புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்துகளுக்கு வழி வகுக்கும். புள்ளி விவரப்படி சைவ உணவு உண்போர், மது அருந்தாதவர்களிடமும் அதிகம் காணப்படுகிறது.
கொழுப்பு உணவுகளிடம் நமக்குள்ள பயம் காரணமாக அரிசி, மைதா, வெள்ளை சர்க்கரை போன்ற கார்போஹைட்ரேட்டுகளை அதிகம் பலரும் அதிகம் உட்கொள்வர்.
ஆனால், இது எரிக்கப்படாமல் கல்லீரல் கொழுப்பாக மாற்றி ஒரு கட்டத்தில் நமக்கு எதிரியாகிறது.
செயற்கை இனிப்புகள், பானங்கள், பேக்கரி, பீட்ஸா போன்ற உணவுகள் உடற்பயிற்சியின்றி அதிகமாகும் தொப்பை, கொழுப்பு கல்லீரலுக்கு வழி வகை செய்கிறது.
எனவே, உடல் எடையை சரியாக பராமரிபது மிகவும் அவசியமாகும். மாவுச்சத்து, துரித, பாக்கெட் உணவுகளை குறைக்க வேண்டும்.
புரதச்சத்தை அதிகப்படுத்துவது, பருப்பு, முளைகட்டிய தானியங்கள், விட்டமின் ஈ கலந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒமேகா- 3 சத்துள்ள மீன் உணவுகளை சேர்ப்பதும் நல்லது.
மது, புகை, மன அழுத்தம் தவிர்த்து நாள்தோறும் உடற்பயிற்சி, ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை மூலம் இதை தவிர்க்கலாம்.