மீன் மற்றும் சிக்கன்... இரண்டுக்குமுள்ள ஊட்டச்சத்து வித்தியாசத்தை அறிவோமா?
தோலில்லாத 100 கிராம் சிக்கனில் சமைத்த பிறகு 110 - 130 கலோரிகள் உள்ளன. அதேவேளையில், எண்ணையில்லா மீனில் 90 - 110 கலோரிகள் உள்ளன.
சமைத்த சிக்கனில் 25 - 27 கிராம் புரதச்சத்தும், மீனில் 20 - 23 அளவும் உள்ளன.
மீனில் கொழுப்பு சத்து 3 கிராமுக்கு குறைவாகவே உள்ளது; சிக்கனில் 3 - 5 கிராம் அளவுக்கு உள்ளது.
அதேவேளையில், 100 கிராம் தோலுள்ள சிக்கன் மற்றும் எண்ணெயுள்ள மீனில் 180 - 200 கிராம் கலோரிகள் உள்ளன.
ஆனால், மீனில் நன்மை செய்யும் கொழுப்புகள் நிறைந்துள்ளதால் உடலில் வீக்கத்தை குறைக்கவும், இதய ஆரோக்கியத்துக்கும் உகந்தது. அயோடின், வைட்டமின் டி போன்றவை குறைந்தளவுள்ளன.
சிக்கனில் புரதம் அதிக அளவுள்ளதால், சிலருக்கு உடல் சூடு, செரிமான பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேவேளையில், சிக்கனை விட மீனில், புரதச்சத்து குறைவாக இருப்பதால் எளிதாக செரிமானமாகக்கூடும்.
ஆனால், அனைத்து வித புரதச்சத்துகளும் உடலுக்கு தேவை என்பது டயட்டீஷியன்களின் அட்வைஸாகும்.
எனவே, ஆரோக்கியத்தை மேம்படுத்த சிக்கன் அல்லது மீனை அவரவர் விருப்பத்துக்கேற்ப சாப்பிடலாம்.