5 லட்சம் கார்களுக்கு இணையாக மாசு ஏற்படுத்தும் ஆஸ்துமா இன்ஹேலர்... ஆய்வில் அதிர்ச்சி !

ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் உள்ளவர்கள் இன்ஹேலர் கருவிகள் மூலம் தங்களுக்கான மருந்தை பயன்படுத்துகின்றனர்.

இதில் 'மீட்டர்டுடோஸ் இன்ஹேலர்' உலர் பவுடர் உடைய இன்ஹேலர், 'சாப்ட் மிஸ்ட் இன்ஹேலர்' போன்ற வகைகள் உள்ளன.

இவை குறித்து, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை சார்பில், ஆய்வு நடந்தது.

அதன்படி, மீட்டர்டு-டோஸ் இன்ஹேலர்களில் மருந்தை எளிதாக நுரையீரலுக்குள் செலுத்த, 'ஹைட்ரோபுளோரோ அல்கேன்' வாயு பயன்படுத்தப்படுகிறது.

இது, சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இன்ஹேலர்கள் வெளியிட்ட மாசுவில், 98 % இவ்வகை இன்ஹேலர்களால் ஏற்பட்டுள்ளன.

இது 2.50 கோடி மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வுக்கு இணையானது. மேலும், ஓராண்டில் அமெரிக்காவில் 5.30 லட்சம் பெட்ரோல் கார்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடுக்கு சமம்.

பிறவற்றில் இத்தகைய வாயுக்கள் இல்லை. நோயாளிகளே வேகமாக உறிஞ்சி மருந்தை உள்ளிழுக்க வேண்டும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

எனவே டாக்டர்கள், சூழலுக்கு உகந்த இன்ஹேலர்களை பரிந்துரைக்க வேண்டும். அது அனைவருக்கும் பாதுகாப்பானது என கூறப்பட்டுள்ளது.