குறுகிய காலத்தில் எடை குறைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

உடல் எடை குறைப்பு என்பது ஒரு படிப்படியான அணுகுமுறை. குறுக்குவழியில் சென்று அடைய முடியாது.

குறிப்பாக, சமூக ஊடகங்களில் வரும் உணவு முறைகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றவே கூடாது.

ஒரே உணவு முறை அனைவருக்கும் பொருந்தாது.

மேலும், புரதம் சாப்பிட்டால் உடனடியாக எடை குறைய வாய்ப்பில்லை, எதையும் வழக்கமாக்கினால் தான் பலன் தெரியும்.

குறுகிய காலத்தில் உடல் எடை குறைப்பதால், தசை இழப்பு, சோர்வு, முடி உதிர்தல், மெதுவான வளர்சிதை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

இதுதவிர, குறைத்த எடை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.