சமையலை ருசியாக்க உதவும் எளிய குறிப்புகள்!
ரசத்தில் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை அரைத்து சேர்த்தால், ரசத்தின் சுவை நன்றாக இருக்கும்.
கருவாட்டு குழம்பு செய்யும் போது கடைசியாக நான்கு பல் பூண்டுகளை தட்டி போட்டால், குழம்பின் சுவை கூடும்.
மோர் குழம்பு செய்யும் போது தாளிப்புக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், குழம்பின் சுவை அதிகரிக்கும்.
ரவை வறுக்கும் போது சிறிதளவு உப்பு சேர்த்து வறுத்தால், ரவையில் நீண்ட நாட்கள் புழுக்கள் வராமல் இருக்கும்.
வெங்காய ஊத்தப்பத்தின் நடுவில் சின்னதாக ஓட்டை போட்டு, அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டால் மேலும், 'கரகர'ப்பாக, ருசியாக இருக்கும்
அடை மாவில் புதினா கீரையை சேர்த்து செய்தால் அடை வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்
உருளைக் கிழங்கு காரக்கறி செய்யும்போது, அதில் அரை கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் மிகவும் சுவையாக இருக்கும்
சாம்பார் செய்ய துவரம் பருப்பு வேக வைக்கும் போது, அதனுடன் சிறிதளவு நெய் சேர்த்தால் பருப்பு விரைவாக வேகும். மணமும், சுவையும் அதிகரிக்கும்.
குக்கரில் கருணை கிழங்கை வேக வைத்து, மசால் வடை மாவுடன் சேர்த்து, வடை சுட்டால் சுவை வித்தியாசமாக இருக்கும்.
பாகற்காய் பழுக்காமல் இருக்க, இரு முனைகளையும் வெட்டி வைத்தால் நீண்ட நாட்கள் வரை பழுக்காது