தேனில் வெந்நீர் கலந்து குடித்தால் இத்தனை நன்மைகளா?

பல்வேறு ஆரோக்கிய பலன்கள் கொண்ட தேனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் கலந்து குடிக்கும்போது, வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து விடுபடலாம்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் ஆற்றல் தேனில் உள்ளது. நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்.

மிதமான சூடுள்ள தண்ணீரில் தேனைக் கலந்து தினமும் காலை குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேறும்.

தேனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்துக்குப் பாதுகாப்பை அளிக்கும். பொலிவான சருமத்தைப் பெற உதவும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெந்நீரில் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவிட்டு ஜாகிங், உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் எடை வேகமாகக் குறையும்.

வெதுவெதுப்பான தண்ணீரில் தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல் நீங்கும்.