பூமியை தாக்க உள்ள சூரிய புயல்: டிவி, விமான சேவை பாதிக்க வாய்ப்பு

சூரியனில் அவ்வப்போது மிகப்பெரிய வெடிப்பு நிகழ்கிறது . இவற்றை சூரிய புயல் என வகைப்படுத்துகின்றனர் .

கடந்த பிப்., 1 மற்றும் 2ஆம் தேதிகளில் சூரியனில் மிக சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது

இது குறித்து ' நாசா' வெளியிட்ட அறிக்கையில் , ' சூரியனின் மேற்பரப்பில் ' ஆக்டிவ் ரீஜியன் பதினான்காயிரத்து முந்நூற்று அறுபத்து ஆறு ' என்ற பகுதியில் மிக சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு ஏற்பட்டது

இந்த வெடிப்பு பூமியின் அயனோஸ்பியர் வளிமண்டலத்தை பாதித்து, ரேடியோ அலைகள் துண்டிப்பு, இருப்பிடம் காட்டும் சேவைகளில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர் .

மேலும் 'டிவி' , விமானம், கப்பல் போக்குவரத்து ஆகியவையும் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது

சூரிய புயல் நிலவரத்தை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை வழங்குவதில், இந்தியாவின் முதல் சூரியக் கண்காணிப்பு விண்கலம், 'ஆதித்யா - எல் ஒன்று' முக்கிய பங்கு வகித்து வருகிறது .

இந்த விண்கலம் பூமியிலிருந்து பதினைந்து லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள பூமி - சூரிய எல் ஒன்று லக்ராஞ்ச் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது

ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் , உடனடியாக நடவடிக்கை எடுக்க அவசரத் திட்டங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்தது.