வைப்பு நிதி, ஸ்வீப் இன் வைப்பு நிதி... எது அதிக லாபம் தரும்?

வழக்கமான வைப்பு நிதி தான் எப்போதும் சவுகரியமானது.

ஓராண்டுக்கு பணத்தை போட்டு வைத்தால், அதற்குரிய வட்டியை அது ஈட்டித்தரும்.

ஸ்வீப் - இன் வைப்பு நிதி என்பது, உங்கள் கணக்கில் பல மாதங்களாக சும்மா துாங்கிக் கொண்டு இருக்கும் உபரி நிதிக்கு, கூடுதல் வட்டி ஈட்டித்தர வைப்பது.

இங்கே கவனிக்க வேண்டிய அம்சம், அந்த உபரித்தொகை எப்போது உங்களுக்கு மீண்டும் தேவைப்படும் என்பது தான்.

ஓராண்டுக்கு மேல் அதை தொட மாட்டீர்கள் என்றால், அதை வழக்கமான வைப்பு நிதி திட்டங்களில் போட்டு, வட்டி வாயிலான வளர்ச்சியை உறுதி செய்துகொள்ளலாம்.

ஒருவேளை நடுவிலேயே பணம் தேவைப்படும் என்ற சூழல் இருந்தால், வழக்கமான சேமிப்பு கணக்கை விட, சற்றே கூடுதல் வட்டியை ஈட்ட ஸ்வீப் - இன் வைப்பு நிதி உதவும்.

ஒன்று சரி, மற்றொன்று சரி என்று எதுவுமில்லை. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப உருவாக்கப்பட்ட வழிமுறை தான் இந்த ஸ்வீப் - இன் வைப்பு நிதி.