சமைத்தால் உணவில் குறையும் சத்துக்கள் சில...

சமைக்கும்போது உணவில் உள்ள பல முக்கியமான வைட்டமின்கள், சத்துக்கள் அழிக்கப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை குறித்து அறிந்துகொள்வோம்.

வைட்டமின் சி சமைப்பதால் 90% வரை அழியக்கூடும், வைட்டமின் பி 50-90% வரை, பி1, பி6 70% வரை, மற்றும் பி5 30-50 % வரை அழியக்கூடும்.

வைட்டமின் ஏ 40%, வைட்டமின் ஈ மற்றும் கே 30-55% சமைப்பதால் அழிக்கப்படுகிறது. பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், கால்சியம் போன்றவையும் சமைக்கும் நீரில் கரைந்து அழியக்கூடும்.

பொதுவாகவே ஒமேகா-3 கொழுப்புகள் அதிக வெப்பத்தில், குறிப்பாக பொரிக்கும்போது சிதைவடையும்.

எனவே நாம் காய்கறிகளை அதிக நேரம் வேகவைக்காமல் இருப்பது நல்லது. அல்லது ஆவியில் வேகவைப்பது வைட்டமின் சி மற்றும் பி ஆகியவற்றை பாதுகாக்கும்.

காய்கறிகள் சமைக்கும் நீரில் உள்ள சத்துக்கள் வீணாக்காமல் இருக்க சூப், குழம்பு போன்ற பிற பயன்பாடுகளுக்குப் பயன்படுத்துவது அவற்றைப் பாதுகாக்க உதவும்.