குழந்தைகளிடம் அதிகரித்து வரும் வாழ்வியல் நோய்களை தவிர்க்க சில டிப்ஸ்
குழந்தைகள் உடல் பருமன் என்பது, மிகவும் கவனம் செலுத்த வேண்டிய பிரச்னையாக உள்ளது.
துரித உணவுகள், சாக்லேட், உடல் இயக்கமின்மை போன்ற தவறான வாழ்வியல் முறை அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, இளம் வயதிலேயே அதிக கொழுப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.
எனவே, சரிவிகித உணவு பழக்க வழக்கம் அவசியமானது.
அதேவேளையில், உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் சீராக, சுறுசுறுப்புடன் இயங்கவும், உடற்பயிற்சி, யோகா என ஏதாவது ஒன்றில், குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும்.
சூரிய ஒளி நேரடியாக உடலில் படும்போது தான், விட்டமின் டி சத்து கிடைக்கும். இது கால்சியம் சத்தை உணவிலிருந்து உறிஞ்சுவதில் முக்கிய பங்காற்றுகிறது.