சின்னம்மை பாதிப்பு.. வேகமாக பரவுது! அலட்சியம் கூடாது !
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், சின்னம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சுற்றுவட்டார மாவட்டங்களில், 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதால், நீர் சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ளும்படி, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தோல் பகுதியை தாக்கும் 'சிக்கன் பாக்ஸ்' எனப்படும் சின்னம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. 'வெரிசெல்லா ஜோஸ்டர்' என்ற எளிதில் பரவும் வைரஸ்தான் இதற்கு காரணம்.
காய்ச்சல், சோர்வு, தளர்ச்சி, பசியின்மை போன்றவை இதன் அறிகுறிகள். பாதிப்பு துவங்கியதும் உடலில் சிறிய நீர் திவளைகள், அதாவது சிறு கொப்பளங்கள் உருவாகின்றன
நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர், சட்டை அணிந்தாலும் உடல் அசவுகரியமாக இருக்கும். உடல் முழுதும் எரிச்சல் உணர்வு ஏற்படுவதுடன், அதிக தண்ணீர் தாகத்தையும் ஏற்படுத்தும்.
சின்னம்மையை பொறுத்தவரை, வீட்டிலேயே வேம்பு, மஞ்சள் அரைத்து உடல் முழுதும் தடவி, கொப்பளங்களின் நீர் கோர்வையை வெளியேற்றலாம்.
கர்ப்பிணியர், பச்சிளம் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகியோருக்கு தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், பாதிப்பு வந்தால் டாக்டரிடம் ஆலோசிப்பது அவசியம்.
உடலில் இருக்கும் நீர் சத்தை முடிந்த வரை குறையாதவாறு தற்காத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.