முதுமையில் முடங்காதீர்.. எலும்புகள் வலுவிழக்கும்...
முதுமையில் உடல் தளர்ந்ததும் பலரும் தாமாகவே இயக்கத்தை குறைத்து கொள்கின்றனர். ஆனால், முற்றிலும் முடங்கி விடக்கூடாது.
சிறிய நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி செய்வது என இயங்கி கொண்டே இருந்தால் தான் உடல் சுறுசுறுப்பாகும். எலும்புகள் வலிமையாகும். உடலின் மற்ற உறுப்புகளும் சீராக இயங்கும்.
தனியாக வசிக்கும் முதியோர், வெஸ்டர்ன் டாய்லெட் இல்லாத பட்சத்திலும், அமர்ந்து மலம் கழிக்கும் வகையிலான ரெடிமேட் டாய்லெட் வாங்கி பொருத்துவது அவசியம்.
மேலும், சுவர்களில் ஆங்காங்கே கைப்பிடி, கிரில் கம்பிகள் பொருத்துவது, பாத்ரூ ம்தரையில் வழுக்காத டைல்ஸ் மாட்டுவது என, சில எளிய வசதிகளை செய்து கொள்ள வேண்டும்.
இதன்மூலம் தேவையில்லாத, எலும்பு முறிவு விபத்துகளை குறைக்கலாம்.
வயது அதிகரிக்கும் போது, நடக்கும் போது பிடிமானம் தேவைப்படும். நிறைய மாடல்களில் 'ஸ்டிக்' கிடைக்கின்றன. குச்சி பிடித்து நடப்பதை கேவலமாக கருதக்கூடாது.
அறுவை சிகிச்சை செய்த பிறகு சிலர் நடக்க முடியாமல் அவதிப்படுவர். மடக்கிக் கொண்டு செல்லும் 'வாக்கர்' வாங்கினால் எங்கும் எடுத்துச் சென்று நடக்கலாம்.
இப்படி இயக்கத்தை சீராக வைக்க தேவையான சில விஷயங்களை செய்து கொள்வது அவசியம்.