ஹீட் ஸ்ட்ரோக்கால் உண்டாகும் சிறுநீரக செயலிழப்பு

நீண்ட நாட்களாக தொடர்ந்து வெப்பத்திலேயே இருப்பவர்களுக்கு காலப்போக்கில் சிறுநீரகங்கள் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதை, பல ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன.

குறைந்தபட்சம் 2.5 லிட்டர் நீர் தினமும் தேவை. வெயிலிலேயே நாள் முழுதும் இருப்பவர்களுக்கு, இதை விடவும் அதிகமாக நீர்ச்சத்து தேவைப்படலாம்.

போதியளவு தண்ணீர் குடிக்காமல் விட்டால், உடலில் நீர்ச்சத்து குறையும். இதனால், சிறுநீரகங்களில் கற்கள் உருவாகலாம்.

வெப்பமான சூழ்நிலையிலேயே அதிக நேரம் இருந்தால், சிறுநீர் அடர்த்தியாகி, தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

வெயில் அதிகமாகி, 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டு, நீர்ச்சத்து குறைந்து, மறைமுகமாக சிறுநீரகங்களை பாதிக்கும்.

இதனால், தற்காலிக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, வெயில் காலத்தில் பலரும் மயங்கி விழுவது பொதுவான விஷயமாக உள்ளது. உடனடியாக சிகிச்சை அளித்தால், சிறுநீரக செயலிழப்பை தடுக்கலாம்.

எனவே, தொடர்ந்து நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பதை தவிர்க்க வேண்டும். ரத்த சர்க்கரை அதிகமாக இருந்தால், நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்.

ஹீட் ஸ்ட்ரோக்கால் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்; குறையலாம். பழங்கள், காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும்.