மன அழுத்தம் போக்கும் மருந்து... ஆய்வில் தகவல்

பொதுவாக தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடல்நலனுக்கு சிறந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தியானம், உளவியல் ஆலோசனை மேற்கொள்வதால் கிடைக்கும் பலனை விட, ஓட்டம், நீச்சல், நடனம் உள்ளிட்ட உடற்பயிற்சிகள் சிறந்த பலனை அளிக்கிறது.

இவை, மன அழுத்தம், பதட்டம் உள்ளிட்ட பிரச்னையை தீர்க்க உதவுவதாக பிரிட்டன் ஆய்வு தெரிவித்துள்ளது.

10 முதல் 90 வயதுக்குட்பட்ட 10 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டது.

உலகில் நான்கில் ஒருவர் மன அழுத்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, இதில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.