தண்ணீரில் தவறி விழுந்த மொபைலுக்கு என்ன பர்ஸ்ட் எய்டு செய்யலாம்?
மொபைல் போன் தண்ணீரில் விழுந்தவுடன் தானாக ஆப் ஆகிவிடும். அப்படி ஆக வில்லை என்றால் வெளியே எடுத்தவுடன் முதலில் அதை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும்.
இதனால் மொபைல் போன் உள்ளே இருக்கும் சாதனங்கள் ஷார்ட் ஆகாமல் இருக்கும். பின் போனில் இருக்கும் சிம் கார்டை வெளியே எடுக்க வேண்டும்.
மேலும் மொபைல் கவர், பேட்டரி, மெமரி கார்டு என அத்தனை பாகங்களையும் தனித்தனியாகக் கழட்டிக் கொள்ளுங்கள்.
அதன்பின், சுத்தமான காட்டன் துணியால் அனைத்துப் பாகங்களையும் ஈரம் போகும் அளவு சுத்தம் செய்யுங்கள்.
பொதுவாக சிம் கார்டுகள் நீர் இறங்காத மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கும். அதனால் சிம் கார்டில் உள்ள நீரைத் துடைத்து வேறொரு மொபைலில் பொறுத்துங்கள்.
மொபைல் போன் தண்ணீரில் விழுந்தவுடன் சூரிய ஒளியில் வைக்கக்கூடாது. அதுபோல் சூடான எந்த ஒரு பொருளையும் மொபைல் பக்கத்தில் வைக்க வேண்டாம். நிழலான இடத்தில் நன்கு காயவிடவும்.
மொபைலை அரிசியில் போட்டால் அது நீரை எடுக்காது. இதனால் எவ்வித பயனுமில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீர் நன்கு காய்ந்த பின்னும் உங்களது மொபைல் ஆன் செய்யவில்லை என்றால் உடனடியாக நீங்கள் சர்வீஸ் சென்டருக்கு எடுத்து செல்லுங்கள். அவர்களிடம், போன் தண்ணீரில் விழுந்தது குறித்து மறைக்கக் கூடாது.