இந்திய டிரைவிங் லைசென்ஸை பயன்படுத்த முடிந்த சில வெளிநாடுகள் !
நியூசிலாந்தின் பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள், சாலைப் பயணத்துக்கு சிறந்ததாகும். உங்களுக்கு 21 வயது, ஆங்கிலத்தில் இந்திய டிரைவிங் லைசென்ஸ் இருந்தால், ஒரு வருடம் வரை இங்கு வாகனம் ஓட்டலாம்.
சிங்கப்பூருக்கு பொதுவாக சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவைப்பட்டாலும், ஆங்கிலத்தில் சரியான இந்திய டிரைவிங் லைசென்ஸ் இருந்தால், ஒரு வருடம் வரை அங்கு டிரைவிங் செய்யலாம்.
இந்திய டிரைவிங் லைசென்ஸ் வைத்து தென்னாப்பிரிக்காவின் அழகிய நகரங்களை தாராளமாக சுற்றிப்பார்க்கலாம்.
இங்கிலாந்தில் உள்ள சாலைகளில் ஒரு வருடத்திற்கு வாகனம் ஓட்டலாம் என்றாலும், டிரைவிங் லைசென்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி மட்டுமே அனுமதிக்கப்படும்.
உங்களின் டிரைவிங் லைசென்ஸின் நகல் ஆங்கிலத்தில் இருந்தால், சுவிட்சர்லாந்தில் வாடகை கார்களை கூட எளிதாக ஓட்டலாம்.
இந்திய டிரைவிங் லைசென்ஸ் உடன் ஸ்வீடனில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து, அழகிய கிராமப்புறங்களில் இயற்கை எழிலை ரசித்தவாறே டிரைவ் செய்யலாம்.
உரிய பரிசீலனைக்கு பின் இந்திய டிரைவிங் லைசென்ஸ் உடன் ஸ்பெயினில் சாலைப் பயணத்தைத் துவக்கலாம். தேவைப்பட்டால், அடையாளச் சான்றிதழை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.