சம்மர் ஸ்பெஷல் புடவைகள்!

புடவைகளில் எத்தனையோ ரகங்கள் இருக்கிறது. இதில் சம்மருக்கேத்த புடவை ரகங்களை பார்க்கலாம்.

பருத்தி உற்பத்தியில் பெயர் போன கோயம்புத்தூரில் உருவாக்கிய புடவைதான் கோவை காட்டன்.

வெயில் நேரத்தில் காற்றை உள்ளே அனுமதித்து பட்டு போல நம்மை பாதுகாக்கும் கோவை காட்டன் புடவையும் அழகே தனிதான்.

காஞ்சி காட்டன், இதன் அழுத்தமான நிறங்கள் ஜரிகை சேர்ந்த பெரிய பார்டர்கள் பார்ப்பவரை கவர்ந்து இழுக்கும்.

மங்களகிரி காட்டன், மெல்லிய பருத்தி புடவைகளில் பலவித வண்ணங்களை ஏற்றி சிம்பிள் பார்டர்கள் கொடுக்கும்.

கலாக்சேத்ரா காட்டன், பளிச் நிறங்கள், எர்த்தி லுக்குகள் என சென்னையின் இப்போதைய ட்ரெண்ட் கலாக்சேத்ரா புடவைகள்தான்.

கம்ப்ச்சாஸ் காட்டன், பிளாக் அண்ட் ஒயிட் காலம் முதல் இன்றைய டிஜிட்டல் காலம் வரை எப்போதும் சாயம் போகாத பிரபலமான டிசைன் செக்கர்ஸ்.

மிக மெல்லிய நெசவில் அற்புதமான வடிவங்கள் அல்லது சிம்பிளான பார்டர்கள் கொண்டது பெங்கால் காட்டன் புடவைகள்.

சில்க் காட்டன், பருவ பெண்கள் முதல் பாட்டி வரைக்கும் அவரவருக்கு தேவையான விதங்களில் வடிவமைக்கப்பட்டு மெல்லிய ஜரிகை கொண்டது.