மறதி நோயை ஏற்படுத்திவிடும் தனிமை ஆகவே பேசுங்கள்!

தற்போதுள்ள தொழில்நுட்பங்கள் காரணமாக, பல வீடுகளில் முதியோர், உறவுகள் இருந்தாலும் தனிமையில் வாடுகின்றனர்.

தினசரி உரையாடல்கள் இல்லாமல் மூளை செயல்பாடு குறையும். நீண்ட கால சோகம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

பொருட்களை மறத்தல், பெயர்கள் நினைவில் வராமல் போதல், ஒரே கேள்வியை மீண்டும் கேட்டல், தேதி மற்றும் கிழமைகளில் குழப்பம், பேச்சு மந்தமாகுதல் ஆகியவை ஆரம்ப அறிகுறிகள்.

இந்த பிரச்னை அவர்களின் தனிமை காரணமாக துவங்கியிருக்கலாம். ஒரு சிலர் கை நடுக்கம் காரணமாக வங்கிகளில் கையெழுத்து போடவே தவிக்கின்றனர்.

மறதிநோய் வராமல் தடுக்க தினசரி 20-30 நிமிடம் முழுமையான ஈடுபாட்டுடன் அவர்களுடன் உரையாடல் இருக்க வேண்டும்.

பழைய கால அழகிய கதைகளை சொல்ல சொல்லி கேளுங்கள்; இது அவர்களுக்கு நல்ல மகிழ்வான மனநிலையை தரும்.

இடது கையில் எழுத சொல்லுங்கள். சுடோகு, பன்னாங்கல், பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்களை விளையாடும் சூழல் ஏற்படுத்துங்கள்.

குழந்தைகள் போன்று, வெளியிடங்களுக்கு செல்லவும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் ஆசை வெளிப்படுத்தாவிடிலும் இவர்களுக்குள்ளும் இருக்கும். அதை முடிந்தபோதெல்லாம் நிறைவேற்றுங்கள்.