டேஸ்டியான உளுந்து ஜாமூன்
தேவையானப் பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 250 கிராம், பால் பவுடர் - 200 கிராம், ஏலக்காய் - 6, நெய் - 100 கிராம், ரோஸ் எசன்ஸ் தேவையானளவு, எண்ணெய் - 400 மி.லி.,
உளுத்தம் பருப்பை நன்கு ஊற வைத்து, நீரை வடிகட்டிய பின், மிக்ஸியில் வெண்ணைய் போல் அரைத்து கொள்ளவும்.
அத்துடன் நெய், பால் பவுடர் சேர்த்து பிசைந்து, சிறு உருண்டையாக உருட்டி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், உருண்டைகளை நன்றாக வேகவிட்டு எடுத்து, ஆற வைக்கவும்.
தணலை மீடியமான அளவில் வைத்து வேக விட வேண்டும்.
பின், தேவையான அளவு ரோஸ் எசன்ஸை சேர்த்து சர்க்கரை பாகு தயாரிக்கவும்.
பாகு சற்று ஆறியதும், அதில் உருண்டைகளை போட்டு, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, சுவையான உளுந்து ஜாமூன் இப்போது ரெடி. பெரியவர்களும் விரும்பிச் சாப்பிடுவர்.