மார்னிங் பிரேக்பாஸ்ட்டில் கட்டாயம் இடம்பெற வேண்டியவை இவை ! 
        
பப்பாளி... இதிலுள்ள புரோட்டியோலிடிக் என்சைம்கள், 
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைட்டமின்கள் செரிமானத்தை 
துரிதமாக்கி, உடலிலுள்ள நச்சுக்களை நீக்கும்.
        
வாழைப்பழம்... நார்ச்சத்து அதிகமுள்ளதால் குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவும்.
        
சர்க்கரை வள்ளிக்கிழங்கு... இதை காலையில் சாப்பிடும்போது செரிமானம் வேகமாக நடப்பதுடன், உட்டச்சத்து உறிஞ்சுதலையும் ஊக்குவிக்கும். இதிலுள்ள நார்ச்சத்து உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. 
        
ஆப்பிள்... நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் அதிகமாக உள்ளதால், இரைப்பை, குடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. 
        
பீட்ரூட்... நார்ச்சத்து அதிகமுள்ளதால் செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை எளிதாக்குவதால் அடிக்கடி ஜூஸாக குடிக்கலாம்.  
        
புரோக்கோலி... நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் நிறைந்திருப்பதால் செரிமானம், குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதயம், எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.