உலகின் நீளமான குகை இது!

அமெரிக்காவின் கென்டஸ்கி மாகாணத்திலுள்ளது 'மமூத் கேவ்' குகை.

இதன் நீளம் 686 கி.மீ., இது உலகின் நீளமான குகை அமைப்பு என அழைக்கப்படுகிறது.

இது 33 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கலாம் என அந்நாட்டின் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் 1941ல் 'மமூத் கேவ் தேசியப் பூங்கா அமைக்கப்பட்டது. இதன் பரப்பளவு 210 சதுர கி.மீ.,

இது யுனஸ்கோவின் பாரம்பரிய பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஆண்டுக்கு 7 லட்சம் சுற்றுலா பயணிகள் இப்பூங்காவுக்கு வருகின்றனர். பசுமை ஆறு, இப்பகுதியில் ஓடுவது குறிப்பிடத்தக்கது.