உள்ளங்கையின் நிறத்துக்கு காரணம் இதுதான்
உடலின் மற்ற பகுதிகளின் நிறங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டுள்ளது.
ஆனால், உள்ளங்கை, உள்ளங்கால் மட்டும் வெளுப்பாக உள்ளது.
பொதுவாக, தோலிலுள்ள மெலனோசைட் எனும் நிறமி செல்கள் ஏற்படுத்தும் நிறமி காரணமாகவே, தோல் கருமை அடைகிறது.
தோலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் புற ஊதாக்கதிர்களை, உறிஞ்சிப் பாதுகாப்பதே இந்த மெலனின் எனும் நிறமி வேதிப் பொருளின் பணி.
ஆனால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் மெலனோசைட் செறிவு ஐந்தில் ஒன்று என்ற அளவிலேயே உள்ளது.
எனவே, இவை ஒப்பீட்டளவில் வெளுப்பாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.