நீண்ட ஆயுளின் ரகசியம் இது
ஒருவர் நீண்டகாலம் உயிர் வாழ்வதற்கு உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, சுகாதார வசதி, நவீன மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காரணமாக இருக்கலாம்.
இந்நிலையில், பிரேசிலில் நுாறு வயதுக்கு மேல் வாழும் 160 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இவர்களில் சிலர் மனதளவில் கூட ஆரோக்கியமாக இருந்தனர்.
சிலர் பிறர் உதவியின்றி தனியாகவே செயல்படுபவர்களாகவும் இருந்தனர்.
சிலர் கொரோனாவையும் சமாளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வில் நீண்ட காலம் வாழ்வதற்கு, ஒருவரது மரபணு, உயிரியல் காரணிகள் போன்றவையும் காரணமாக உள்ளதென விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.