ஐ ப்ரோவின் அழகை கூட்ட சில டிப்ஸ்...
தினமும் இரவில் தூங்கும் முன்னர், விளக்கெண்ணையை புருவத்தில் தடவி 2-3 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து வந்தால் புருவம் அடர்த்தியாக வளரும்.
ஐ ப்ரோ பென்சிலை விளக்கெண்ணெயில் தொட்டு புருவத்தில் வரைந்து வந்தால், அதே வடிவத்திற்கு புருவம் வளரும்.
தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சிறிது சூடு செய்து இளஞ்சூட்டிலேயே புருவத்தில் மசாஜ் செய்து வரலாம்.
2 சின்ன வெங்காயங்களை தட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். அந்த சாற்றில் ஒரு பஞ்சை நினைத்து புருவத்தில் தடவி வர விரைவிலேயே முடி வளர்வதை காணலாம்.
கற்றாழை சதைப் பகுதியை புருவத்தில் காலை மாலை என தடவிவந்தால், புருவ முடிக்கு பலமளித்து அடர்த்தியாக வளரும்.