வீண் மனக்கசப்புகளை தவிர்க்க... கன்பூசியஸின் தன்னம்பிக்கை வரிகள் !

நீங்கள் விரும்புவதை வைத்திருப்பதில் மகிழ்ச்சி என்பது இல்லை, ஆனால் நீங்கள் வைத்திருப்பதை விரும்புவதில் அது உள்ளது.

உங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ளாவிட்டால் கவலைப்பட வேண்டாம். மாறாக மற்றவர்களை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால் கவலைப்படுங்கள்.

கருணையுடன் செயல்படுங்கள்... ஆனால் நன்றியை எதிர்பார்க்க வேண்டாம்.

உங்களை நீங்களே மதியுங்கள். அப்போதுதான், மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள்.

உங்களிடமிருந்து அதிகமாகவும், மற்றவர்களிடமிருந்து குறைவாகவும் எதிர்பார்த்தால், வீண் மனக்கசப்புகளை தவிர்க்கலாம்.

பிரச்னையை விவரிக்க முடியாதவர்களால், ஒருபோதும் அதற்கு தீர்வு காண முடியாது.

எதைச் சாதிக்க முடியுமென நினைக்கிறீர்களோ, அதை பொறுத்து உங்களை நீங்களே மதிப்பிடுவீர்கள்; நீங்கள் எதைச் சாதித்தீர்கள் என்பதை பொறுத்து மற்றவர்கள் உங்களை மதிப்பிடுவர்.

அனைத்திலும் அழகு உள்ளது; ஆனால் அனைவரும் அதைப் பார்ப்பதில்லை.

முயற்சிப்பதை ஒருபோதும் நிறுத்தாத வரை, நீங்கள் எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை.