சிக்கிம், டார்ஜிலிங் செல்ல சுற்றுலா ரயில் அறிவிப்பு
இந்திய ரயில்வே தனியார் பங்களிப்போடு, பல்வேறு இடங்களுக்கு, சுற்றுலா ரயில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கோடை விடுமுறைக்காக, ரயில்வேயுடன், 'டூர் டைம்ஸ்' உடன் இணைந்து, ரயில் சுற்றுலாவுக்கு, ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
மதுரையில் இருந்து, வரும் ஏப்.,25ம் தேதி சுற்றுலா சிறப்பு ரயில் புறப்படுகிறது.
விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்படுகிறது
இந்த 14 நாட்கள் சுற்றுலாவில், முதலாவதாக அழகிய மற்றும் கலாசார
முக்கியத்துவம் வாய்ந்த, டார்ஜிலிங் கேங்டாக்கின் முக்கிய இடங்களையும்
பார்க்கலாம்.
பின் இரண்டாம் பயணத் திட்டத்தில், வட கிழக்கு மாநிலங்களில், குவாஹாத்தி, ஷில்லாங், சிரபூஞ்சி, மாவுலின்னாங் மற்றும் டாவ்கி ஆகிய இடங்களையும் காணலாம்.
மூன்றாவது பயணமாக, சர்வதேச பயணமாக, பூட்டான் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயணத்தில், திம்பூ - புனாகா - பாரோ - செலே லா பாஸ் ஆகிய இடங்களுக்கு சென்று வரலாம். சுற்றுலாவுக்கு ஏற்றார்போல்,ரூ. 45,950 - ரூ.97,900 வரை கட்டணம் இருக்கும்.
இந்த சுற்றுலா குறித்து, மேலும் தகவல் பெறவும், முன்பதிவு செய்யவும், 73058 58585 என்ற எண்ணிலும், www.tourtimes.in என்ற தளத்தையும் தொடர்பு கொள்ளலாம்.