தொடர் உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
ரத்த அழுத்தம் சீராக இருந்தால் தான் இதயம் சீராக இயங்கும். அழுத்தம் அதிகரித்தால், இதயத்துக்கு வேலைப் பளு அதிகம்.
தொடர்ந்து அதிக அழுத்தத்துடன் இதயம் செயல்பட்டால், ஹார்ட் அட்டாக ஏற்படலாம்.
ரத்த குழாய்களில் அதிக அழுத்தம் காரணமாக வெடித்து பக்க வாதம், மூளை பாதிப்பு ஏற்படலாம்; சிறுநீரகம் செயலிழக்கலாம்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்பு, தைராய்டு, உடல் பருமன் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
இதில், ஏதேனும் ஒரு பாதிப்பு இருந்தால், மற்றவையும் வரலாம் என்பதால் பரிசோதிப்பது அவசியம்.
உயர் ரத்த அழுத்த பாதிப்பை நிச்சயமாக இயல்புக்கு கொண்டு வர முடியும்.
உணவில் உப்பை குறைக்க வேண்டும். சிலர் இந்துப்பு பயன்படுத்துகின்றனர். இதில், பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், சிறுநீரகம், இதயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
உயரத்துக்கேற்ற உடல் எடை பராமரிப்பது, மன அழுத்தத்தை குறைப்பது, மது, புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், துாக்க நேரம் மாறுபடுவதை தவிர்ப்பது உள்ளிட்ட, வாழ்வியல் மாற்றங்களால் ரத்த அழுத்த அளவை இயல்பாக்க முடியும்.