குழந்தைகளிடம் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள் என்னென்ன?
இன்றைய குழந்தைகளில் மறைமுக ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுகிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
துரித உணவு, காய்கறி தவிர்ப்பு, அதிக ஸ்கிரீன் டைம் போன்றவை இதற்கு முக்கிய காரணம்.
குழந்தைகள் சோர்வாகவும், கவனக்குறைவாகவும் இருந்தால் இரும்புச்சத்து குறைபாடு இருக்கும்.
எலும்பில் வலி இருப்பின் வைட்டமின் டி மற்றும் கால்சியம் குறைபாடு காணப்படலாம் .
வளர்ச்சி பிற குழந்தைகள் போல் இல்லை எனில் புரதச்சத்து குறைபாடாகும்.
அதிக மறதி ஏற்படின் வைட்டமின் பி12 குறைபாடும் இருக்க வாய்ப்புண்டு.
இக்குறைபாடு உங்கள் குழந்தைகள் மத்தியில் இருந்தால், உணவு முறையை உடனடியாக மாற்ற வேண்டும்