தர்பூசணி விதைகளில் உள்ள சத்துக்கள் என்னென்ன...

தர்பூசணி விதைகளில் மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், புரதம், வைட்டமின் பி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.

100 கிராம் விதைகளில் இரும்புச்சத்து 25-30% உள்ளது. இவை ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து, மேலும் அவற்றை சுத்திகரிக்கிறது.

புரதம் 28-30% உள்ளது. இது தசைகளை உருவாக்கவும், திசுக்களைப் புதுப்பிப்பதற்கும், பராமரிப்பதற்கும் உதவுகிறது.

மேலும் உடலுக்கு தேவையான நார்சத்து 4-5%, நல்ல கொழுப்பு 45-50%, பொட்டாசியம் 5-7% மற்றும் கார்போஹைட்ரேட் 10-19% உள்ளன.

இதை அப்படியே மென்று சாப்பிட்டாமல் வறுத்து பொடியாக செய்து தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் அனைத்து சத்தும் உடலுக்கு முழுவதுமாக கிடைக்கும்.

முளைகட்டிய விதைகளில் சத்துக்கள் இன்னும் அதிகமாகக் கிடைக்கும்.

ஆனால் விதைகளின் தரம், உலர்த்தும் முறை, அளவு ஆகியவற்றைப் பொறுத்து இதன் சத்துக்களின் அளவு மாறுபடும்.