கரு தரிக்க உதவும் சத்துக்கள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே, நவீன வாழ்க்கை முறை மாற்றங்களுடன், சரிவிகித உணவு முறையில் கவனம் செலுத்துவது, கருவுறுதல் வாய்ப்புகளை மேம்படுத்த உதவும்.

நாம் சாப்பிடும் உணவுகள், கரு முட்டை மற்றும் விந்தணுக்களின் தரத்தில் 90 நாட்கள் வரையில் தாக்கத்தை உண்டாக்கலாம்.

கரு தரிக்க திட்டமிடும் போது, ரத்த சோகையை தடுக்கும் இரும்பு சத்துள்ள முருங்கை கீரை, கேழ்வரகு, கம்பு முதலானவற்றை தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.

இரும்புச் சத்து முழுமையாக உடலில் உறிஞ்ச வைட்டமின் 'சி' அவசியம். அதனால், நெல்லிக்காய், ஆரஞ்சு, சர்த்துக்குடி, எலுமிச்சை போன்றவற்றை சேர்த்து சாப்பிட வேண்டும்.

அன்றாட உணவில் கரு முட்டை, விந்தணுக்களின் வளர்ச்சி உட்பட ஆரோக்கியமான செல் பிரிவுக்கு, 'பி' வைட்டமின் மிக மிக முக்கியமானது.

கீரை வகைகள், புரக்கோலி போன்ற பச்சைக் காய்கறிகளில் போலேட் சத்து அதிகம் உள்ளது.

துத்தநாகம் நிறைந்த உணவுகளான பூசணி விதைகள், கொண்டைக்கடலை, பீன்ஸ் ஆகியவை, ஹார்மோன் உற்பத்தி மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இத்துடன் புரதம், 'ஒமேகா - 3' என்று அன்றாட தேவைக்கு ஏற்ப, ஊட்டச்சத்து நிறைந்ததாக உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்வது, கரு உருவாக உதவும்.