பொட்டாசியம் அதிகமானால் சிறுநீரகதிற்கு என்ன பிரச்னை?
பொட்டாசியம் என்றொரு உப்பு ரத்தத்தில் அதிகமாக சேர்ந்து விடாமலிருக்க நம் உடல், சிறுநீர் மூலமாகவும் குடல் (மலம்) மூலமாகவும் அதனை வெளியேற்றுகிறது.
ஹைபர்கேமியா என்பது ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் ஒரு நிலையாகும், இது பொதுவாக (5.0-5.5 ext{ mEq/L}) என்ற அளவை விட அதிகமாக இருக்கும்.
உங்கள் உடலிலிருந்து அதிகப்படியான பொட்டாசியத்தை வெளியேற்றி, தேவையானதை தக்கவைப்பதில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் ரத்தத்தில் பொட்டாசியம் அளவு கூடும். மேலும் அதனால் இதயத்திற்கு ஆபத்து ஏற்படும்.
தசை பலவீனம், சோர்வு, குமட்டல், நரம்பு உணர்வின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படுவதோடு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்னைகளுக்கும் வழிவக்கும்.
அறிகுறிகள் உள்ளவர்கள் ரத்தப் பரிசோதனை மூலம் பொட்டாசியம் அளவைச் சரிபார்த்து, மருத்துவரின் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும்.
இந்த உப்பை அதிகமாகக் கொண்டுள்ள உணவுகளை குறைக்க வேண்டும்.
வாழை, ஆரஞ்சு போன்ற பழங்கள், கீரைகள், தக்காளி, மீன், மாமிசம் போன்றவை பொட்டாசியம் சத்து நிரம்பியவை. அவற்றை குறைக்கலாம்.
கேரட், முட்டைகோஸ், வெள்ளரி, கத்தரிக்காய், ஆப்பிள், திராட்சை, அன்னாசியில் பொட்டாசியம் சத்து குறைவாக உள்ளது.