கருச்சிதைவு ஏற்படாமல் தவிர்க்க என்ன செய்வது?

பெண்களுக்கு பி.சி.ஓ.எஸ்., (கருப்பை நீர்க்கட்டிகள்), ஹார்மோன் சமநிலையின்மை போன்ற காரணங்களால் கர்ப்பம் தரிப்பதில் சிரமம் ஏற்படலாம்.

கருமுட்டை சரியாக வளராததால் கரு உருவாகாமல் போகலாம்.

சில நேரங்களில் கரு உருவானாலும், அது சரியாக வளராமல் ஆரம்ப நிலையிலேயே கருச்சிதைவு ஏற்படலாம்.

கருமுட்டை நன்றாக இருந்தாலும், கரு ஒட்டி வளர வேண்டிய கருப்பை பகுதியில் குறைபாடு இருந்தால் கர்ப்பம் தங்காமல் இருக்கலாம்.

இது போன்ற நிலைகளில் கருவுறுவதில் தாமதம் ஏற்படும்.

எனவே, கர்ப்பம் தாமதமாகும் பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து உண்மையான காரணத்தை கண்டறிவது முக்கியம். பிறகே அவர்களுக்கேற்ற சிகிச்சையளிக்க முடியும்.

அதேவேளையில், பெண்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்து, மன அழுத்தத்தை குறைத்து போதிய ஓய்வெடுக்க வேண்டும்.