டாக்டர்களுக்கு திடீர் மாரடைப்பு வரக் காரணமென்ன?
நீண்ட, நிலையற்ற பணி நேரம்... தொடர்ச்சியான தூக்கக் குறைபாடு மற்றும் உடலின் இயற்கை கடிகார சுழற்சியில் இடையூறு உண்டாகிறது.
அதிக மன அழுத்தம்... நோயாளிகள் மற்றும் குடும்பத்தினரின் அழுத்தம், மருத்துவ விதிகள் பற்றிய கவலைகள்.
உடல் செயல்பாடில்லாதது... ஆப்ரேஷன் அறையில் நீண்ட நேரம் நிற்பது, வெளிநோயாளிகள் பிரிவில் நீண்ட நேரம் உட்காருதல், பணி காரணமாக உடற்பயிற்சி தவறவிடுதல்.
ஆரோக்கியமற்ற உணவு வழக்கங்கள்... முறையான உணவு நேரங்களை கடைபிடிக்காதது, மருத்துவமனை கேன்டீன் உணவு, டீ மற்றும் காபி அதிகளவு குடித்தல்.
மனச்சுமை... வேலைசோர்வு, மனச்சோர்வு மற்று உடல் சோர்வு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
பல டாக்டர்கள் தங்கள் சொந்த ஆரோக்கிய பரிசோதனைகளை தள்ளிப்போடுவதுடன், துவக்க நிலை எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிப்பதும் தொடர்கிறது.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலால் அதிக அளவில் இருதய பாதிப்பு வருகிறது.