கண்களிலிருந்து அதிகளவில் நீர் வர காரணமென்ன?
கண்ணீர் அதிகமாக நீர் வருவதற்கு கண் உலர்வு, ஒவ்வாமை, கண் இமை தொடர்பான பிரச்னைகள், கண்ணீர் பாதையில் அடைப்பு போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
வாகனம் ஓட்டும் போது காற்றிலுள்ள துாசி, சிறிய துகள்கள் கண்களில் படுவதால் எரிச்சல் ஏற்பட்டு கண்ணீர் வரலாம்.
நீண்ட நேரம் சாலையை உற்றுப் பார்த்தப்படி வாகனம் ஓட்டும் போது கண்கள் உலர்வதும், கண்களுக்கு ஏற்படும் களைப்பும் கண்ணீர் அதிகம் வருவதற்கு காரணமாக இருக்கலாம்.
அதே போல் கண்ணாடி தேவைப்படும் பார்வைக் குறைபாடு இருந்தாலும் கண்களில் நீர் வடியலாம்.
இரவு நேரத்தில் வாகனம் ஓட்டும் போது, எதிரே வரும் வாகனத்தின் ஒளி நேரடியாக கண்களில் படுவதை தவிர்க்கவும்.
துாசியிலிருந்து கண்களை பாதுகாக்க கண்ணாடி அணிய வேண்டும்.
கண்ணீர் வருவதற்கான மூலக்காரணங்களை முதலில் சரி செய்ய வேண்டும். அதன் பிறகும் கண்ணீர் வரும் பட்சத்தில் கண் மருந்து பரிந்துரைக்கப்படும்.
பாதிப்பு தொடர்ந்தால் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். பார்வைக் குறைபாடு இருந்தால் கண்ணாடி கட்டாயம் அணிய வேண்டும்.