நீரிழிவால் உண்டாகும் பார்வையிழப்பை தவிர்க்க என்ன செய்யலாம்?
சமீப காலமாக நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தான் அதிகளவில் கண் சிகிச்சை எடுக்கின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் இதற்கு காரணம்.
நீரிழிவு, ரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட நோய். துவக்கத்தில் சரிவர கவனிக்காமல் விடுவதால், மாரடைப்பு, சிறுநீரகம் மற்றும் கண் நரம்பு பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.
நீரிழிவு உள்ளவர்களுக்கு கண் நரம்புகளில் பாதிப்பு இருந்தாலும், பரிசோதனை செய்யாமல் அவர்களால் தெரிந்து கொள்ளவே முடியாது.
ரத்த ஓட்டம் குறைந்து கண் நரம்பு ரத்தம் ஓட்டம் குறையும் போது, அதாவது ஒளி குவிக்கும் இடத்தை பாதிக்கும் போது தான் நமக்கு தாமதமாக தெரிய வரும்.
எனவே, பாதிப்புக்கு மாத்திரை உட்கொண்டாலும் பார்வை இழப்பை தடுக்க கட்டாயம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும்.
அதன் மூலம் சிறிதாக இருக்கும் போதே சர்க்கரை அளவை குறைத்து ஊசி, அல்லது லேசர் முறையில் சிகிச்சையளிக்க முடியும்.
இதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. யாராக இருந்தாலும் கண் பார்வை குறைந்தால் உடனடியாக டாக்டரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
உணவை பொறுத்தவரை கிழங்கு வகைகளை குறைத்து விட்டு இயற்கையான காய்கறி, பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.