எச் 1 என் 1 இன்ப்ளுயன்சா என்ன செய்யும்?

'ஸ்வைன் ப்ளு' எனப்படும் எச் 1 என் 1 இன்ப்ளுயன்சா வைரஸ், பருவமழைக்கு முன், பருவநிலை மாற்றத்தால் சுவாசத் தொற்று நோயை ஏற்படுத்தும்.

அக்டோபர், நவம்பரில் வரும் இத்தொற்று முன்கூட்டியே ஆகஸ்டில் உருவாகியுள்ளது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

காற்றின் மூலம் பரவுவதால் பாதிக்கப்பட்டவர்கள் இருமினாலோ, தும்மினாலோ, பேசும் போது எச்சில் மற்றவர்கள் மீது பட்டாலோ, அவர்கள் பயன்படுத்திய பொருளைத் தொடும்போது வைரஸ் தொற்று பரவுகிறது.

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சுவாசத் துளிகள், சுவாசப்பாதை வழியாக வெளிவரும் சிறிய துகள்கள் மூலம் பரவும்.

காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தலைவலி, உடல்வலி, தசைவலி, அதிக சோர்வு, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

வெளியே சென்று வந்தால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். இருமல் அல்லது தும்மலுக்குப் பிறகு கைகளை கழுவுவது அவசியம்.

காய்ச்சல் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்வதோடு கூட்டமான இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிந்து காற்றோட்டமான சூழலில் வாழ வேண்டும்.

இதற்கென தடுப்பூசிகள் உள்ளன அவற்றை போடலாம். அறிகுறிகள், மற்ற சுவாச பிரச்னைகளைப் போலவே இருப்பதால் டாக்டர் மூலம் ஆய்வகப் பரிசோதனை மூலமே உறுதி செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் நீரிழப்பைத் தவிர்க்க காய்கறிகள், சூப் போன்ற சூடான திரவ உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.