அதிக நேரம் தூங்கினால் என்ன நடக்கும்?

தினமும் குறிப்பிட்ட நேரம் துாங்குவது அவசியம்.

இந்நிலையில் தூங்குவது குறித்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை ஆய்வு மேற்கொண்டது.

அதில், அதிக நேரம் மற்றும் குறைந்த நேரம் துாங்குவது மூளை, இதயம், நுரையீரல், நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு உட்பட பல உறுப்புகளை, விரைவில் வயதாக மாற்றுவதாக ஆய்வு எச்சரித்துள்ளது.

இதில், தினமும் 6.4 மணி முதல் 7.8 மணி நேரம் துாங்குபவர்களுக்கு இப்பாதிப்பு குறைவாக உள்ளது.

உடல் உறுப்புகள் வயதாவதை கணக்கிட, இயந்திரக் கற்றலை பயன்படுத்தி 17 உறுப்பு மண்டலங்களுக்கான 23 உயிரியல் கடிகாரங்களை உருவாக்கினர்.

இதன்மூலம் உடலுறுப்புகளின் வயதையும் கண்டறிந்தனர்.